சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு - ஒருங்கிணைப்புக் கூட்டம் மாசி 21 (5.3.17) ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
👉 பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழிக்க
அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டன.
👉
எழுதிங்கள்பட்டி பகுதிக்குள் இருக்கும் சீமை கருவேல மரங்களை ஒழிக்க
விநாயக குழுமத்தினர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
👉
ஓலப்பாளையம், கந்தாம்பாளைம், கடப்பமடை மற்றும் கருக்கங்காட்டூர் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை ஒழிக்க திரு.
S.C.சென்னியப்பன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
👉
காஞ்சிக்கோவில், பள்ளபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பகுதிக்குள் இருக்கும் சீமை கருவேல மரங்களை ஒழிக்க
தீரன் பாசறை அமைப்பினர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
👉 பெருந்துறை மற்றும் கருமாண்டிச்செல்லிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற
நாளொன்றுக்கு 10 மணிநேரம் JCB இயந்திரம் மூலம் சுத்தப்படுத்த ஆகும்
செலவை கீழ்க்கண்ட அன்பர்கள் ஏற்றுக் கொண்டனர்.
1.திரு.சௌந்திரராசன்(பசுமை இயக்கம்).
2.திரு.சண்முககணபதி (பொறியாளர்).
3.திரு.P.T.கோபாலகிருஷ்ணன்(அரிமா சங்கம்).
4. திரு.சக்திவேல் (சித்த மருத்துவர்).
5. திரு.V.N.கந்தசாமி.
6. திரு.சந்திரசேகரன் (ரோட்டரி சங்கம்).
7.திரு.பல்லவி பரமசிவம்.
8.திரு.சந்துரு (JAI TV)
9.திரு.T.N.சென்னியப்பன் (அமைதிப் பூங்கா அறக்கட்டளை).
2 நாள்களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள்.
1.நவஇந்திய மாதர் சங்கம்.
2.வைஷ்ணவி தங்க மாளிகை.
🏹 இது தவிர V.V.National உரிமையாளர் கைப்பேசி மூலம் தனது பங்களிப்பையும் உறுதி செய்துள்ளார். 🌿பசுமை பெருந்துறை🌳 மீதும்,வருங்கால தலைமுறையினர் மீதும் உண்மையான அக்கறை கொண்டு கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,100 விழுக்காடு சீமை கருவேலான் மரங்களை ஒழிக்கும் தருவாயிலுள்ள வரப்பாளையம் "கிராமம் காக்கும் இயக்கத்தார்க்கும்",சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்றம் மூலமாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.