ஏழ்மை நிலையில் படிக்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் அளித்து படிக்க உதவி புரிதல்.
ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அவர்களின் தேவை அறிந்து உதவி செய்தல்.
பொதுவிழாக்கள், பொங்கல் திருநாள் போன்ற தினங்களில் அந்தந்த ஊர்களில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.
மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை ஒவ்வொரு கூட்டத்தில் போதும் தீர்மானம் மூலம் நிறைவேற்றப் பாடுபடுதல்.
குறைதீர்க்கும் நாள் போன்றவைகளை அந்தந்த பகுதிகளில் நடத்தி மக்களின் குறைகளை மனு மூலம் பெற்று அரசிடம் சமர்ப்பித்தல்.
வாக்காளர்களுக்கு அவர்களுடைய வாக்குரிமையை உணர்ந்தி வாக்காளர் அடையாள அட்டை எடுக்க உதவி புரிதல்
அறிவொளி முகாம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் எழுத்தறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு பெறச் செய்தல்
2015-04-07
சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? -
எப்படி தடுப்பது ? – கிட்னி ஹெல்த் டிப்ஸ் -
சிறுநீரக கோளாறு
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகி
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
2015-04-01
வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்.....! இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விசயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விசயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்… முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிருமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும். காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான். இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு. நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துக ிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களு க்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்
2015-03-31
நான்கு எச்சரிக்கை மணிகள்:-
இறைவன் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நான்கு முறை அபாய எச்சரிக்கை மணிகளை ஒலிக்கின்றார். i.e, Four Danger Alarms.
பெரும்பாலானோர் இறைவனின் இந்த அபாய எச்சரிக்கைகளை பொருட்படுத்துவதே இல்லை.
அந்த நான்கு அபாய எச்சரிக்கை மணிகளாவன:
1.நரை (white hair)
2.திரை (eye cataract )
3.பிணி (diseases )
4.மூப்பு (old age)
இந்த நான்கு அபாய எச்சரிக்கை மணிகள் , மரணம் நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் உணர்த்தவே. உணராவிடில் மரணம் நிச்சயம் .
ஆகவே மரணம் திடீரென வருவதில்லை . நரை வந்த உடனேயே ஒருவனுக்கு இறை சிந்தனை வந்துவிட வேண்டும் . பௌதீக விஷயங்களில் உள்ள பற்றை படிப்படியாக குறைத்துக் கொண்டே வரவேண்டும் .
இந்த வாழ்வு இறைவன் நமக்குத் தந்த பரிசு. "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவை . இறைவனின் இந்த நான்கு எச்சரிக்கைகளை உணர்ந்து செயல்பட்டால் இறைவனை அடையலாம் .
உண்மை சற்று கசக்கத்தான் செய்யும் . வரும்போதும் தனியாகத்தான் வந்தோம் ; போகும்போதும் தனியாகத்தான் போயாக வேண்டும் . யாரும் கூட வரமாட்டார்கள்; நாம் செய்த பாவ புண்ணியங்களைத் தவிர .
2015-03-31
குளிர்ச்சி தரும் மூலிகை எண்ணை அல்லது நல்லெண்ணை பயன்படுத்தி சனிக்கிழமை குளிக்கவும்.நான்கு மணி நேரம் கழித்து இளவெந்நீரில் குளிக்க வேண்டும்.அன்று பகல் உறக்கம் கூடாது.வெள்ளாங்கு இரசம் சாதம் மட்டுமே உண்ண வேண்டும்.சனி நீராடு என்பதன் பொருள் எண்ணை குளியலே ஆகும்..கோடையில் உடல் சூட்டைக் குறைக்க இக்குளியல் மிக அவசியம்..மூலிகை எண்ணை கிடைப்பது கொஞ்சம் கடினம்.தேவைப்படுவோர் கேட்டால் பெற்று தருகிறேன்.உடல் நலம் காப்போம்.நோயற்ற வாழ்வே,குறைவற்ற செல்வம்.
2015-03-30
அருமை உறவுகளே! இன்றைய வாழ்க்கை முறை நம்மை மனதளவிலும்,உடலளவிலும் பலவீனமானவர்களாக மாற்றமடைய வைப்பதாகவே உள்ளது.நஞ்சை உண்டு,சிந்தனையிலும்,பேச்சிலும் நஞ்சை உமிழ்கிறோம்.இதுவா தமிழர்களின் வாழ்க்கை முறை??இல்லை அன்பர்களே..பிறர் வாழ தன்னையே தியாகம் செய்து கொண்டவர்களே நம் தமிழர்கள்..நாலடியார்,புறநானூறு,திருமந்திரம்,திருக்குறள்,பெரியபுராணம் எனும் அரிய புதையல்களைப் படித்துள்ளீர்களா? "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற பட்டினத்தாரின் ஞான வரிகளைச் சிந்தித்துள்ளீர்களா?..படிக்க முயற்சியுங்கள்..பிறர் எண்ணங்களுக்கேற்ப வாழாமல்,நமக்காக வாழ முயற்சிப்போம்,தமிழ் பாரம்பரியத்தை மீட்க முயல்வோம்,நல்ல சமுதாயத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம்.அதற்கான ஒரு பகுதியே "சிந்திக்க ஒரு நிமிடம்" எனும் வருங்காலப் பதிவு.நம் அவசர வாழ்க்கையில் ஒரு நிமிடத்தையாவது ஒதுக்கி நம் உடல்,மன நலனைக் காக்கும் இப்பதிவுகளைப் படிக்க வேண்டுகிறேன்.என்றும் மக்கள் பணியில் "இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்றம்",பெருந்துறை.
2015-03-30
சிந்திக்க ஒரு நிமிடம்
#1 "உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்தே,உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே_மகா சித்தர் திருமூலர்"
உயிர் இருக்கும் வரையே இந்த கூட்டிற்கு(உடலிற்கு) வேலை.அதனால் உயிரை வளர்க்க உடலை வலிமையாக்க வேண்டியது அவசியம்.இன்றைய காலகட்டத்தில் ஏழை,பணக்காரன் என அனைவரும் பல்வேறு நோயுற்று மருத்துவமனைக்கு செல்வது மிக வேதனையாக உள்ளது.இதற்குக் காரணம் என்ன?சிந்தியுங்கள்..1.சத்தற்ற உணவுகள்(பட்டை தீட்டப்பட்டு,சில்கி எனும் இராசாயனம் பூசப்பட்டு,ஆற்றல் இழந்த பளபளப்பான அரிசி).
2.இரசாயன மருந்துகளில் விளைந்த காய்கறிகள்,பழங்கள்.
3.உயிர்சத்துக்களைத் திருடி நோய்களுக்கு கதவைத் திறந்து வைக்கும் வெள்ளைச்( வெள்ளைக்காரனின்) சர்க்கரை.
4.கல்நெய்(டீசல்,பெட்ரோல்) உற்பத்திக்கு பிந்தைய கழிவான நிறமற்ற எண்ணையை சமையல் எண்ணெய்களில் கலப்படம் செய்வது.அனைத்து பெயர்பெற்ற பெரிய,சிறிய நிறுவனங்களும் இதைச் செய்கின்றன.
5.இராசயன ஊசிகளில் வளர்ந்த சீமைப் பசுக்களின் இரசாயனப் பாலினைக் குடிப்பது.
6.மைதா மாவு என்னும் நஞ்சு மாவினால் செய்த திண்பண்டங்களையும்,உணவுப் பொருள்களையும் உண்ணுதல்.
7.இரசாயனம் நிரம்பிய சவர்க்காரம்(சோப்பு),சவர்காரக் குழம்பு(சாம்பு) மற்றும் உடல் அழகைப் பேண பயன்படுத்தும் அந்நிய பொருட்கள்.
8.நிலம்,நீர்,காற்று உட்பட்ட பஞ்சபூதங்களையும் மாசுபடுத்தி நோய்க்கு வித்திடும் தொழிற்சாலைகளின் கழிவுகள்.
9.இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல நோய் வந்தவுடன் ஓடிச் சென்று பணத்தை நீராய் செலவிட வைக்கும் ஆங்கில மருத்துவமனைகள்.
அப்படியானல் இவற்றை மாற்ற முடியாதா?நம் (குழந்தைகள்)வருங்காலத் தலைமுறை இதை விட கொடிய நோய்களை சந்திக்கத்தான் வேண்டுமா?புற்றுநோய்,டெங்கு,சர்க்கரை நோய் என நாம் நோயால் அவதிப்பட்டு இறக்கத்தான் ஓடிஓடி நிம்மதி இழந்து பொருள் ஈட்டுகிறோமா?..இதற்கு தீர்வுதான் என்ன??..காத்திருங்கள்..நிச்சயம் தீர்வு உண்டு..அதை அடுத்த பதிவில் காண்போம்..