இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயல்கள்

  • இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குதல்.
  • படித்து முடித்து வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு அரசு வழங்கும் கடனுதவி திட்டங்கள், வேலை வாய்ப்புகள், சுய தொழில் முயற்சிகள் பற்றிய விபரங்கள் எடுத்துரைத்தல்.
  • ஏழ்மை நிலையில் படிக்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் அளித்து படிக்க உதவி புரிதல்.
  • சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நாட்களில் பள்ளிக் குழந்தைகளின் தேவை அறிந்து அதை பூர்த்தி செய்தல்.
  • ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அவர்களின் தேவை அறிந்து உதவி செய்தல்.
  • சீரழிவுப் பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல்.
  • பொதுவிழாக்கள், பொங்கல் திருநாள் போன்ற தினங்களில் அந்தந்த ஊர்களில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.
  • தன்னார்வ அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்.
  • பெருந்துறை பகுதியிலுள்ள பல நிறைவேற்றப்படாத திட்டங்கள், பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள் போன்றவற்றை முறையான வழியில் அரசிடம் எடுத்துரைத்தல்.
  • மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை ஒவ்வொரு கூட்டத்தில் போதும் தீர்மானம் மூலம் நிறைவேற்றப் பாடுபடுதல்.
  • குறைதீர்க்கும் நாள் போன்றவைகளை அந்தந்த பகுதிகளில் நடத்தி மக்களின் குறைகளை மனு மூலம் பெற்று அரசிடம் சமர்ப்பித்தல்.
  • இரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், கால்நடை மருத்துவ முகாம், போலியோ ஒழிப்பு முகாம் போன்றவைகளை இலவசமாக நடத்த உதவி புரிதல்.
  • வாக்காளர்களுக்கு அவர்களுடைய வாக்குரிமையை உணர்ந்தி வாக்காளர் அடையாள அட்டை எடுக்க உதவி புரிதல்.
  • அறிவொளி முகாம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் எழுத்தறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு பெறச் செய்தல்.
  • இது போல் தொண்டுள்ளம் கொண்டுள்ள இளைஞர்களை எங்கள் மன்றத்தின் இணைத்து, நற்பணி மன்றத்தை விரிவுபடுத்தி மக்களின் தேவைகளை அறிந்து அதை உடனுக்குடன் நிறைவேற்றுதல்.
  • மன்றத்தை விரிவுபடுத்தி உறுப்பினர்கள் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வுக்குழு ஒன்றை ஏற்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவைகள் நிகழாமல் தடுத்தல்.
  • இதுபோல் பல கடமைகளை செய்ய நாங்கள் காத்துள்ளோம். "தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்" எனும் வாக்கிற்கேற்ப எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

 

Copyright © 2025 ILAYA BHARATHAM ILAIGNAR NARPANI MANDRAM